×

தி.நகர் அலுவலகத்தில் பாஜ துவக்க தினம் கொண்டாட்டம்

சென்னை: பாஜ துவங்கப்பட்ட தினம் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.  இந்தியா முழுவதும் நேற்று பாஜவின் ஸ்தாபன தினம் நிகழ்ச்சி நடந்தது. சென்னை தி.நகரில் உள்ள பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். எளிமையான முறையில் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.  இதில் பாஜ இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், ஊடகத்துறை தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Tags : Baja Opening Day Celebration ,Nagar Baja Launch Day Celebration , ffice, BJP Commencement Day
× RELATED மாற்றுத்திறனாளிகள் 31ம் தேதி வரை: அரசு ஆபிசுக்கு செல்ல வேண்டாம்