மலேசியா தப்ப முயன்ற 10 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த 127 பேர் மலேசியா செல்வதற்காக சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு ேநற்றுமுன்தினம் காலை வந்தனர். அவர்களிடம் சுங்கத்துறை மற்றும் குடியுரிமை துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 10 பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த 10 பேர் பயணத்தையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். இவர்கள் தவிர மீதமுள்ள 117 பேருடன் விமானம் புறப்பட்டு சென்றது. பின்னர் 10 பேரையும் குடியுரிமை அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.

Advertising
Advertising

அதன்படி 10 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது  அனைவரும் விமானம் மூலம் மலேசியா தப்பிச் செல்ல முயன்றது உறுதியானது. அதை தொடர்ந்து 10  பேர் மீதும், ஐபிசி 134, 135, 188, 269, 271 உள்ளிட்ட 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது ெசய்தனர். பின்னர் பூந்தமல்லியில் உள்ள கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Stories: