×

தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியம் பிடித்தம், இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து  மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30 சதவீத்தைப் பிடித்தம் செய்யப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு பொருளாதார அவசரநிலையை  நோக்கிப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தையறியாமல் மத்திய அரசே தன்னிச்சையாக சம்பளத்தைக் குறைத்து அவசர சட்டம் பிறப்பித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்து அந்தத் தொகையை ஒருங்கிணைந்த நிதியில் சேர்த்திருப்பதும் ஜனநாயக அணுகுமுறை இல்லை. இந்த நிதி, தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்கானது. இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல தொகுதி மக்களை வஞ்சிப்பதுமாகும். இந்த அவசர சட்டத்தை மோடி அரசு ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thirumavalavan , Volume Development Fund, Thirumavalavan
× RELATED பத்திரிகை துறையின் கோரிக்கைகளை...