×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்தலாம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்” என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ேஷர் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Office ,Templar ,Vijayakanth Announcement , Corona, Vijayakanth
× RELATED மாற்றுத்திறனாளிகள் 31ம் தேதி வரை: அரசு ஆபிசுக்கு செல்ல வேண்டாம்