சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் தொடரில் நிலையாக வெற்றிகளை குவிக்கும் அணி என்றால் சிஎஸ்கே அணிக்கு முதல் இடம். அவர்கள் 10 ஐபிஎல் தொடர்களில் விளையாடி 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். நாக் அவுட் சுற்றுகளில் அதிகமுறை வென்ற அணியாகவும் சிஎஸ்கே திகழ்கிறது. அந்த அணி இந்திய அணிக்காக ஆடாத பல திறமையான வீரர்களை உருவாக்கி உள்ளது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பேட்ஸ்மேன் என்றால் அது எம்.எஸ்.டோனி (சிஎஸ்கே) தான். அதே போல் கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசும் பந்து வீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா(எம்ஐ) தான்’ என்று  நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் புகழ்ந்துள்ளார்.

* பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பிஎம்-கேர்ஸ் நிவராண நிதியாக 11 லட்சம், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதியாக 10 லட்சம் மற்றும் ஆந்திரா முதல்வர் நிவாரண நிதியாக 5 லட்சம் என மொத்தம் ₹26 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
Advertising
Advertising

* எத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தப் போவதில்லை. டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டிக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறேன். நிச்சயமாக அதற்கு தகுதி பெறுவேன்’ என்று மல்யுத்த வீரர் சுஷில் குமார் (36 வயது) தெரிவித்துள்ளார்.

* உணவு இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று உணவு விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திர நிக் கிர்ஜியோஸ் அறிவித்துள்ளார்.

* கோவிட்-19 நிவாரண நிதி திரட்டும் வகையில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், கோனெரு ஹம்பி, ஹரிகிருஷ்ணா, அதிபன் போஸ், விதித் குஜ்ராத்தி, துரோணவல்லி ஹரிகா ஆகியோர் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் மோதும் ஆன்லைன் செஸ் போட்டி ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது. 1900 கட்டினால் ஆனந்த் தவிர்த்து ஏதாவது 2 பேருடன் விளையாடலாம். ஆனந்துடன் மோதுவதற்கான கட்டணம் 11,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: