×

திருவண்ணாமலையில் உள்ள தீபமலையில் 10 நாட்களாக தங்கியிருந்த சீன சுற்றுலா பயணி: கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை: ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இங்கே தங்கியிருந்த வெளிநாட்டினரில் சிலர், கொரோனா நோய்த்தொற்று வீரியம் அடைவதற்கு முன்பாகவே, தங்களது சொந்த நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில், அரசு அனுமதியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலை மீது செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை மலைமீது சென்று சோதனை செய்தபோது, கந்தாஸ்ரமம் அருகே தங்கியிருந்த 35 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கீழே அழைத்து வந்தனர்.விசாரணையில், அந்த வாலிபர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கை சேர்ந்த யாங்யாஊரி என்பதும், கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 25ம் தேதி முதல் தீபமலை மீது ஏறிச்சென்று அங்கேயே கடந்த 10 நாட்களாக தங்கியதும் தெரிந்தது.இதையடுத்து, அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதால், கொரோனா நோய்த்தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில், பரிசோதனைக்காக திருவண்ணாமலை தனியார் மருத்துவனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : tourist ,Chinese ,Deepamalai ,Thiruvannamalai ,tourist stays , Chinese, tourist, Deepamalai , Thiruvannamalai,
× RELATED மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன...