கொரோனா வார்டில் பணிக்குச் சென்ற பின்னர் நான் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன்: கேரளாவில் செவிலியர் உருக்கம்

கொச்சி: என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என கொரோனா வார்டில் பணியாற்றும் நர்ஸ் உருக்கமாக தெரிவித்தார். கொரோனா வார்டில் பணியாற்றி விட்டு வீடு திரும்புவதற்குள் மருத்துவமனையிலேயே பலமுறை குளிக்கிறேன் என கூறினார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாளர்கள் யாரும் கிடையாது என்பதால் நாங்களே அவர்களைக் கவனிக்கிறோம் என்று நர்ஸ் ரீஜா கூறினார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது என தெரிவித்தார். அவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறினார். கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களில் சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்துள்ளன. ஆனாலும் கூட, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு கவசங்களின் உதவியுடன் முகம் சுளிக்காமல் பணியாற்றி வருகிறார்கள். கேரளாவின் கொச்சி மாவட்டம் கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் ரீஜாஜா விஷ்ணு, தனக்கு அளிக்கப்பட்ட சவாலான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தி வருகிறார். இது பற்றி ரீஜாஜா விஷ்ணு கூறுகையில், கொரோனா வார்டில் எனக்குப் பணி கொடுக்கப்பட்டதும் அதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன். எனக்கு நான்கு மணி நேரம் மட்டுமே டூட்டி என்றாலும், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வர வேண்டும் என கூறினார். அப்போது தான் பாதுகாப்புக் கவசத்தை முழுமையாக அணிந்து உரிய நேரத்தில் பணிக்குச் செல்ல முடியும் என கூறினார்.

கொரோனா வார்டில் இருப்பவர்களுடன் உறவினர்கள் யாரும் இருக்க முடியாது என்பதால் அவர்கள் தனிமையில் தவிப்பார்கள் என கூறினார். அவர்கள் சந்திக்கும் நபர்கள் என்பது எங்களைப் போன்ற வெகு சிலரே என்பதால், எங்களைப் பார்த்ததும் பல்வேறு சந்தேகங்களைக் கேட்பார்கள் என தெரிவித்தார். தங்கள் குடும்பத்தினர் பற்றி விசாரிப்பார்கள் என தெரிவித்தார். கொரோனா நோயாளிகள் தனிமையில் இருப்பதால் அச்சத்தில் இருப்பார்கள் எனவும், அவர்களிடம் கரிசனமாகப் பேசி நோயில் இருந்து மீள உதவி செய்வேன் என கூறினார். புதிய நோயாளி வரும்போது மனம் பதறும். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்குச் செல்லும்போதும் இன்றுடன் இந்த பாதிப்பு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்கிற ஏக்கத்துடனே செல்வேன். கொரோனா தொற்று ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகப் பாதுகாப்புக் கவச உடை அணிவதால் உடல் உபாதையைக் கழிக்கக் கூட செல்ல முடியாது என உருக்கமாக தெரிவித்தார். கைகளில் உறை அணிந்திருப்பது சிரமத்தைக் கொடுக்கும் எனவும், கவச உடையால் உடல் முழுவதும் சூடாகி வேர்த்துக் கொட்டும் என கூறினார். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்பாக மருத்துவமனையிலேயே பலமுறை குளிப்பேன் என கூறினார். என் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வேன். அதனால் என்னால் யாருக்கும் பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பேன் என தெரிவித்தார்.

வீட்டுக்குச் சென்றதும் மீண்டும் குளித்துவிட்டே உள்ளே செல்வேன் என கூறினார். எனக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. கொரோனா வார்டில் பணிக்குச் சென்ற பின்னர் நான் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன் என கூறினார். என் குழந்தை இரவில் தூங்குவதற்குச் சிரமப்பட்ட போதிலும், பாதுகாப்புக் காரணமாகத் தாய்ப்பால் கொடுப்பதில்லை என தெரிவித்தார். கொரோனா வார்டில் இருந்து ஒவ்வொரு நோயாளியும் குணமடைந்து வெளியேறும் போது அவர்களின் உறவினர்களை விடவும் சிகிச்சை அளித்த டாக்டர்களும் செவிலியர்களும் உதவியாளர்களும் மகிழ்கிறோம் என கூறினார். புதிய நோயாளிகள் வரக் கூடாது என்பதே தினமும் எங்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

Related Stories: