சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் புகுந்து ஆட்டை கொன்ற சிறுத்தை: விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம்:   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை,  யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. சிறுத்தை உள்ளிட்ட  வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களில் நுழைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வது  தொடர்கதையாக நடந்து வருகிறது.  சத்தியமங்கலம் அருகே  வரதம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயி குப்புசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு குப்புசாமி தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை  கடித்துக்கொன்று இழுத்துச்சென்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த  சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுத்தை வெள்ளாட்டை  அடித்துக்கொன்று இழுத்துச்சென்றதால் அப்பகுதி விவசாயிகள்  அச்சமடைந்துள்ளனர். நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம்  வனச்சரகர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையின் கால்தடத்தை  ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் தானியங்கி கேமராக்கள்  பொருத்தப்பட்டது. விரைவில் சிறுத்தையை கூண்டு  வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் அப்பகுதி விவசாயிகளிடம்  உறுதியளித்தனர்.

Related Stories: