×

கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-ம் இடம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 14ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்திலும் கொரோனா நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு அலுவலகங்கள்,  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துதான் வருகிறது. இதுவரை 571 பேருக்கு தொற்று  பாதிப்புடன் இந்தியளவில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அத்தியவாசிய பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தல், ஊடரங்கு நீட்டிப்பு? மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை  கூட்டத்தில் முதல்வருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை உதயகுமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை  செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


Tags : Palanisamy ,half ,Tamilnadu ,Corona ,district administration , Tamilnadu 2nd in Corona half; Chief Minister Palanisamy consulted with all the district administration on video
× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன்...