×

முதல்வர் ரூ.3280 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் கொரோனா நோய்க்கு ஒரே தீர்வு மக்கள் ஒத்துழைப்பு தான்: வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேட்டி

சென்னை: கொரோனா நோய்க்கு ஓரே தீர்வு மக்கள் ஒத்துழைப்பு தான் என்றும், நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக முதல்வர் ₹3280 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் என்று வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:கொரோனா நோயில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வருமுன் காப்போம் என்ற  திட்டம் மூலம் முதல்வர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார். பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து, அது துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை ₹405 கோடி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு ₹3280 கோடி செலவில் நிவாரண நிதி  மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க இதுவரை 11 கூட்டங்களை முதல்வர் நடத்தியிருக்கிறார்.

இந்த நோய்க்கு ஒரே மருந்து சுய தனிமை தான். மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த நோய்க்கு ஓரே தீர்வு. பொதுமக்கள் தொடர்ந்து வெளியே வருகின்றனர். இதனால் தான் அத்தியாவசிய பொருட்களை விற்க்கக்கூடிய கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோய் தடுப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ₹510 கோடி ஒதுக்கியுள்ளது. கிராம பகுதிகளில் அங்கு உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முதல்  நிலை தேர்ச்சி பெற்ற தன்னார்வு இளைஞர்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு  செய்யபட்டு வருகிறது.  கிராமப்புற மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி  வருகின்றனர்.

Tags : Chief Minister ,Coroner ,disaster management minister ,Corona ,CM , CM dedicates,Rs .3280 crore Corona disease ,only solution , people, revenue, disaster management minister, Interview
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...