×

கடந்த 24 மணி நேரத்தில் 490 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4067ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4067ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 490 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 69,000ஐ தாண்டிய நிலையில், கொரோனாவால் 1,272,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2, 62,217 பேர் குணமடைந்தனர். மேலும்  45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் 109 பேர் உயிரிழந்த நிலையில், 292 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. 42 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 571 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பிகாரில் 30 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 18 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
சட்டிஸ்கரில் 9 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 3 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 122 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 18 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 84 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 503 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 18 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 314 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 45 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 253 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 14 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 21 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 5 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 106 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 151 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
பாஞ்சாபில் 68 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 80 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 226 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 10 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 165 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 321 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 227 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 19 பேர் குணமடைந்தது.

Tags : India , Over 490 people affected by coronation in India in the last 24 hours
× RELATED இந்தியாவில் 50,000 பேருக்கு வேலை கொடுப்பதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு!!