×

கொரோனா வைரஸ் பீதி மளிகைப்பொருள் வரத்து இல்லை: வியாபாரிகள் தகவல்

சேலம்: கொரோனா வைரஸ் பீதியால்  மளிகைப்பொருட்கள் வரத்து 95 சதவீதம் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பரவல் தடுக்க பிறப்பிக்கப் பட்ட  ஊரடங்கு உத்தரவு காரணமாக வட மாநிலங் களில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய உணவுப்பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மளிகைக்கடைகளில் பொருட்கள் வேகமாக குறைந்து வருகின்றன. இதனால் ஒரு சில பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலையும் ஏறியுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் மளிகைப்பொருட்களின் தேவையை வட மாநிலங்கள்தான் 70 சதவீதம் பூர்த்தி செய்கின்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகைப்பொருட்களின் சப்ளை 95 சதவீதம் குறைந்துள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலான  12 நாளில் மளிகைக்கடைகளில் 75 சதவீத பொருட்கள் விற்று தீர்ந்துவிட்டன.  மக்கள் அனைவரும் தற்போது வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக காய்கறி, மளிகைப்பொருட்களின் செலவும் வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்ேபாது அரவை ஆலைகள், தொழில் நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களிடம் 15 நாட்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள் இருப்பில் உள்ளன.

இந்த பொருட்களை தற்போது வெளியே கொண்டு வரமுடியவில்லை. மேலும் கொரோனா வைரஸ் பீதியால் உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல் பொருட்கள் ஏற்றி,இறக்கும் கூலி தொழிலாளர்களும் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மளிகைக்கடைகளுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை செய்ய முடியவில்லை. மேலும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில் வியாபாரிகள் கடைகளில் இருப்பதால் மளிகைப்பொருட்கள் எடுத்து வர முடியவில்ைல. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Coronavirus Virus Panic ,Merchantss ,Grocery , Corona Virus, Grocery,: Merchants
× RELATED 5 ஆயிரம் பேருக்கு மளிகை பொருட்கள் விஷால் வழங்கினார்