×

குணமான நோயாளிக்கும் கொரோனா இருக்கலாம்

சிறப்பு மருத்துவர் சுவாப்னில் பரிக், உளவியல் மருத்துவர் மகிரா தேசாய், நரம்பியல் உளவியல் மருத்துவர் ராஜேஷ் பரிக் எழுதிய `தி கொரோனா வைரஸ்: உலகளாவிய தொற்று குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்ற புத்தகத்தின் இணையதள பதிப்பு வெளியாகி உள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுவாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 14 நாட்களுக்குள் அதன் அறிகுறி தெரிய வரும். ஆனால், சிலருக்கு ஐந்து அல்லது ஆறு நாட்களில் இதன் அறிகுறிகள் தென்பட துவங்கும். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த வைரஸ் வளர்வதற்கான காலமாக, இரண்டு வாரங்கள் வெளியே வரவிடாமல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் குணமடைந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அவர்களிடம் கொரோனா இன்னும் வளரும் கால நிலையிலேயே இருக்கவும் வாய்ப்புள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலமற்றவர்களை போல் இல்லாமல், நல்ல உடல் நலத்துடன் இருப்பது போலவும் தெரியும். ஆனால், அவர்களுக்குள் வைரஸ் இருக்கும்.
இது அவருடன் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் பரவத் தொடங்கும். எனவே, இது போன்ற ஆரோக்கியமானவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10,000ல் வென்டிலேட்டர் ரயில்வே சாதனை:
கொரோனா அச்சுறுத்தலால் முகக் கவசம், கையுறை, சானிடைசர், செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் இன்றைய சந்தை விலை 6.5 லட்சம். ஆனால், பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ₹10 ஆயிரம் செலவில் மட்டுமே தயாரிக்கக் கூடிய வென்டிலேட்டர் வடிமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், கம்ப்ரசர் கிடையாது. மற்றபடி, கொரோனா நோயாளியின் நுரையீரலுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடிய மற்ற எல்லா அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

Tags : patient , corona
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...