×

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மார்ச் 23ம் தேதி முதல் வேலைக்கு வராத 53 அமைச்சு பணியாளர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ம் தேதி முதல் பணிக்கு வராத 53  அமைச்சு பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 1.20 லட்சம் போலீசார் இரவு பகலுமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விடுமுறையை தவிர்த்து அனைவரும் சுழற்றி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் அனைத்து பிரிவு போலீசாரும் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அமைச்சு பணியில் உள்ள 53 பேர் கடந்த 23ம் தேதி முதல் எந்தவித முன் அறிவிப்பின்றி தொடர் விடுமுறையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறையில் உள்ள பணிகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த போலீஸ் கமிஷனர் முன் அறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்துள்ள 53 அமைச்சுப்பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பு கோரி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதன்படி, 53 அமைச்சு பணியார்களுக்கு உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : office ,Chennai Police Commissioner ,Ministry , Chennai Police Commissioner's Office, Notices, Corona
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...