×

ரேஷன் கடைகளில் 1000 வாங்க சமூக இடைவெளியை பின்பற்றாத மக்கள்: கொரோனா பரவும் அபாயம்

திருவொற்றியூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும் 14ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அனைத்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள், சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஏழை, நடுத்தர மற்றும் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து, வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது, ரேஷன் கடைகளில் இந்த தொகை வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதை  வாங்க  வரும் மக்கள் முககவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால் பல ரேஷன் கடைகளில் இந்த சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் மிகவும் நெருக்கமாக நீண்ட வரிசையில் நின்று நிவாரண தொகையை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு எந்தவித அச்சமின்றி பொதுமக்கள் ரேஷன் கடைகளில் உரசியபடி நிற்பதால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.  மணலி புதுநகரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று 1000 வாங்க வந்த மக்கள், ஒருவரை ஒருவர் உரசியபடி நெருக்கமாக வரிசையில் நின்றனர். இதை முறைப்படுத்த போலீசார் கூட அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரேஷன் கடை அலுவலர்கள் மூலம் நேரடியாக பொதுமக்களில் வீடுகளுக்கு வந்து  உதவி தொகையை வழங்குவதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Corona ,ration shops , Ration Stores, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...