×

வீணாகும் விளைபொருட்கள் விவசாயிகளுக்கு பேரிடி: கி.வே.பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர்

* பொருட்கள் அழுகி போகாமல் இருந்தாலே போதும். ஆனால், எங்களிடம் வந்து வாங்கி விற்கும் வணிகர்களிடம் பயம் இருக்கிறது. இந்த பயத்தை போக்கத்தான் அரசு தவறி விட்டது.

தமிழகத்தில் குறிப்பாக, திருச்சி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் நேந்திரம் பழம் பயிரிடுவது மிக அதிகம். காரணம், நேந்திரம் சிப்ஸ் தயாரிக்க இங்கிருந்து தான் பழங்கள் கேரளா கொண்டு செல்லப்படுகிறது.  நேந்திர வாழை பயிரிடுவதற்கு இடுபொருட்கள் விலை அதிகம். 1 ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. ஒரு நேந்திரம் பழம் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ரூ.5க்கு விற்பனையாகிறது. அந்த பழமும் நமது பகுதியில் விற்கிறது. வாழையில் எந்த ரக வாழையாக இருந்தாலும் சரி மண்டியை திறந்தால் தானே எங்களிடம் வாங்கி கொண்டு வியாபாரிகளோ, ஏஜெண்ட்களோ மண்டியில் போட முடியும்.

 ஆனால், கேரளாவிற்கு வாகனங்களை ஓட்டிச் செல்ல டிரைவர்கள் வரவில்லை. இன்னொன்று, மண்டியும் திறக்கபடவில்லை. இதை, சாதாரணமாக நமது அரசால் எளிதில் செய்து தர முடியும். விவசாயிகள் விளைபொருட்கள் தான் கொண்டு செல்கிறோம் என்பது போலீசாருக்கு தெரியும். அவர்கள் எங்கிருந்து பொருட்கள் வருகிறது என்பதை கேட்டு அவர்களிடம் உரிய அடையாள அட்டைகள் இருக்கிறதா என்று பார்த்து விட்டாலே போதும். ஆனால், அவ்வாறு செய்யப்படுவதில்லை. இப்போது பொருட்கள் விலை குறைந்தால் குறையட்டும். ஆனால், அந்த பொருட்கள் அழுகி போகாமல் இருந்தாலே போதும். ஆனால், எங்களிடம் வந்து வாங்கி விற்கும் வணிகர்களிடம் பயம் இருக்கிறது. இந்த பயத்தை போக்கத் தான் அரசு தவறி விட்டது.

வேளாண் விளை பொருட்களின் சந்தைகளை ஒழுங்குமுறைப்படுத்த எந்த விதமான நெட்வோர்க்கும் இல்லாததால், காய்கறி மற்றும் பழவகைகள் தேங்கி கிடக்கிறது. வேலை எதுவாக இருந்தாலும் அரசே செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் விவசாயிகள், வணிகர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருந்தால் எங்களது கருத்துக்களை அவர்களிடம் சொல்ல ஏதுவாக இருக்கும். இது ஒரு ஒருங்கிணைப்பு நகர்வு. இதை அனைவரும் சேர்ந்து ஆலோசித்தால் தான் அந்த முடிவு நல்ல முடிவாக இருக்கும். விளைந்த விளைபொருட்களை எடுத்து சென்று, அதை வாங்கி, கீழே கொண்டு போய் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் நேந்திரம் பயிரிட்டுள்ளனர். நிறைய முதலீட்டை போட்டுள்ளனர்.

எனவே, அந்த நேந்திரம் வாழை பழத்தை கேரளாவிற்கு கொண்டு செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தவறியதால் நேந்திரம் பயிரிட்ட விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தாழவாடி என்கிற பெரிய காய்கறி விளைகிற மையம் உள்ளது. காய்கறி சந்தை ஒட்டன் சத்திரமாக இருக்கலாம். ஆனால், தாழவாடியில் தான் டன் கணக்கில் காய்கறி தேங்கி கிடக்கிறது. அங்கிருந்து பொருட்களை கொண்டு சென்று விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   வேளாண்துறை சார்பில் அலுவலர்களை முடுக்கி விட்டு, எங்களை சந்தித்து பேசி பொருட்களை சந்தைப்படுத்த ஏற்பாடு செய்து இருந்தால் போதும்.

இதை செய்ய தவறியதால் தான் எங்களுக்கு ஒரு பேரடியாக போய் விட்டது. வாழை ஓராண்டு மட்டுமல்ல 16 மாதங்கள் விளைகிற வாழைகள் கூட உள்ளது. குறுகிய கால பழ வகைகளான முலாம்பழம் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதே போன்று தர்ப்பூசணி உள்ளிட்ட பழவகையில் 70 முதல் 100 நாட்கள் வரக்கூடிய பயிர்கள். இந்த பழங்களை வாங்க யாரும் வராததால் அழுகி போய் விடுகிறது. இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க எங்களிடம் இருந்து பொருட்களை வாங்கி சந்தைகளில் கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : KV Ponniyan ,Independent Farmers Association , Farmers, Farmers, KV Ponniyan, President of the Conventional Farmers' Association
× RELATED யானை தாக்கி விவசாயி பலி