×

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா  நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 101 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக போலீசாருக்கு 33 நாட்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் உணவுப்படியாக 8250 ரூபாய்  வழங்க ஆணையிட்டுள்ளது  அதற்காக 75.27 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்யாவசியப்பணிகளை மேற்கொண்டுவரும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மாஸ்க், கிருமிநாசினி வாங்க 1.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் நோய்த்தடுப்பு பணிகளை செய்யத்தேவையான உபகரணங்கள், ரசாயனங்கள் வாங்க 1.9 கோடியும், தற்காலிக தனிமைப்படுத்துதல் முகாம்களை அமைக்க சுகாதாரத்துறைக்கு 22.57 கோடியும், பேரிடர் மேலாண்மை குழுவிற்குத்தேவையான நோய்த்தடுப்பு பொருட்கள் வாங்க ₹50 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரொக்கம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Corona, Allocation, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...