அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 560 கோடி டாலர் உயர்ந்து 47,560 கோடி டாலராக அதிகரித்துள்ளது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த வார இறுதியில் ரூபாய் மதிப்பு 76.19 என கடும் வீழ்ச்சியை அடைந்தது. இருப்பினும்,  அந்நிய செலாவணி கையிருப்பு உயர தங்கம் விலை உயர்வு காரணமாக அமைந்துள்ளது. மார்ச் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மேற்கண்ட வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 250 கோடி டாலர் உயர்ந்து 43,960 கோடி டாலராக உள்ளது. தங்கம் கையிருப்பு மதிப்பு 300 கோடி டாலர் உயர்ந்து 3,090 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: