×

ட்வீட் கார்னர்... பயிற்சி செய்யலாமா?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர், வீராங்கனைகள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களின் உடல்தகுதியைப் பராமரிக்கும் வகையில் பிரத்தியேகமான உடற்பயிற்சிகளை  பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் ரசிகர்கள் விரும்பினால் தன்னுடன் இணைந்து பயிற்சி செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார். தினசரி உடற்பயிற்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக பதிவிட்டு, விருப்பம் உள்ளவர்கள் அதைப் பார்த்தபடியே பயிற்சி செய்யலாம் என்று கூறியுள்ள வீனஸ், இதற்காக ஹேஷ்டேக் #CoachVenus உருவாக்கியுள்ளார். இதில் இணையுமாறு தனது சகோதரி செரீனா வில்லியம்ஸ் உட்பட சக டென்னிஸ் வீராங்கனைகள், ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Corner , Corona virus, Indian cricket team
× RELATED ட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்!