×

சில்லி பாயின்ட்...

*  டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த தொடக்க வீரர்கள் என்றால் அது இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தான் என்று ஆஸி. முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
* கோவிட்-19 நோய் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ரத்தாகும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2,800 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது.
* ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கூறியுள்ளார்.
*  2027ம் ஆண்டு ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது.
* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஓ கீப் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அடுத்த உள்ளூர் சீசனுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெறாததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


Tags : starters , 20 Cricket, Rohit Sharma, David Warner
× RELATED சில்லி பாயிண்ட்...