×

‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தை உடனே அனுப்பி வைங்க: மோடியிடம் டிரம்ப் கோரிக்கை

வாஷிங்டன்: கொரோனா வைரசை கட்டுப்படுத்த மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி பிடியை தளர்த்துமாறு, பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கடந்த மார்ச் 25ம் தேதியன்று ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்த மருந்துதான் தற்போது அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சில ஏற்றுமதிகளை சிறப்பு அடிப்படையில் அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது.  இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தனது தினசரி செய்தி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘நான்  இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன்.  

மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி தடையை நீக்க கோரிக்கை விடுத்தேன்’’ என்றார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வட்டாரம் கூறுகையில், ‘‘மலேரியா தடுப்பு நோய் சிகிச்சையில் பல ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் நல்ல பலனைத் தருகிறது. வைரஸ் சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பிற சிகிச்சையின் விளைவை தொடர்ந்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அதன் முடிவுகள் குறித்த முழு தகவல்களையும் பின்னர் தருவோம். இது தொடர்பாக சோதனைகள் நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தது.


Tags : Trump , Hydroxy Chloroquine, Modi, Trump
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்