×

ஏப்.8-ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்: அதிமுக சார்பில் பங்கேற்க்க முதல்வர் பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: ஏப்.8-ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,577-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 505 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்தும் அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமியுடன் தொலை பேசியில் உரையாடினார். மேலும் ஏப்.8 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்க, முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி அழைப்புவிடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Tags : Modi ,CM Palanisamy ,meeting ,AIADMK , All party meeting, AIADMK, CM Palanisamy, PM Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...