ஏர் இந்தியாவுக்கு குவியும் பாராட்டு மழை; கொரோனா பரவும் இந்த கொடிய சூழலிலும் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது... பாகிஸ்தான், ஈரான் பாராட்டு

டெல்லி: கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு, நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது. மும்பையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து, அந்நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டது.

அப்போது, ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவர்கள்,  ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளனர். இது பற்றி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ஏர் இந்தியாவின் மூத்த விமான கேப்டன் ஒருவர், ``நாங்கள் ஐரோப்பாவுக்கு விமானம் இயக்கியதைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பாராட்டியுள்ளது. இது எனக்கும் என் குழுவினருக்கும் மிகவும் பெருமையான தருணம் என தெரிவித்துள்ளார்.

ஈரான் வாழ்த்து

நாங்கள் இரானின் வான்வெளியை விட்டு வெளியில் செல்லும்போது அந்நாடும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. இறுதியில் ஏர் இந்தியா விமானம் துருக்கிக்குள் நுழைந்தது. அவர்களும் எங்களுக்குப் பாதை வழங்கி பெருமையுடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இரானின் வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் வெளி நாடுகளைச் சேர்ந்த விமானங்களுக்கு தங்கள் நாட்டின் நேரடி பாதையை மிகவும் அரிதாகவே அந்நாடு வழங்கும். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதால் இரான் உட்பட அனத்து நாடுகளும் மனிதநேயத்துடன் இந்த உதவியைச் செய்துள்ளன.

Related Stories: