×

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரிப்பு: நாடு முழுவதும் 274 மாவட்டங்கள் பாதிப்பு...மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 274 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 3374 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று மட்டும் புதிதாக 472 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 267 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தப்லிகி ஜமாஅத் மாநாடு காரணமாக இந்தியாவில் கோரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாக உள்ளது. தற்போது 4.1 நாட்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.மாநாடு காரணமாக பாதிப்பு இல்லை என்றால் 7.4 நாட்களாக இருந்திருக்கும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 27,661 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 23,924 அரசாங்கங்கள் மற்றும் 3,737 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். அந்த முகாம்களில் 12.5 லட்சம் பேர் தஞ்சமடைகிறார்கள். அதேபோல் 19,460 உணவு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9,951 அரசு மற்றும் 9,509 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகும். 75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளிகள் மற்றும் தொழில்துறை தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. தடை உத்தரவின் கீழ் உள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலைமை போதுமானதாக உள்ளது.

Tags : districts ,India ,Coronation , India, Corona, Country, Districts, Central Health Department
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை