×

கொரோனா தடுப்பு பணி தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தடுப்புப் பணிகள் மட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு சேர்ந்திருக்கும் நிலையில், அதற்காக மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கிறது.
கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் பணிகளுக்காக ஏராளமான மருத்துவக் கருவிகளும், மருந்துகளும் வாங்க வேண்டியுள்ளன.

அதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி தமிழக அரசுக்கு தேவைப்படுகிறது. மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக 3,000 கோடி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பிற தேவைகளுக்காக மத்திய அரசின் உதவியாக 4,000 கோடி, சிறப்பு மானியமாக 9,000 கோடி வழங்கும்படி பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசு கோரியவாறு 16,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

அத்துடன் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்பணம் ஆகியவற்றையும் மத்திய அரசு விரைவாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadas ,Coronation Prevention Coronation Prevention for Central Government Funding , Corona, Tamil Nadu, Central Government, Finance, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...