அரசு நல்ல முடிவு எடுத்திருக்கிறது... புஜாரா பாராட்டு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சரியான நேரத்தில் அரசு நல்ல முடிவு எடுத்திருக்கிறது என்று  கிரிக்கெட்  வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் தினமும் தங்கள் அனுபவங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு குறித்து செதேஷ்வர் புஜாரா கூறியதாவது: கொரோனா வைஸ் பரவலை தடுக்க  அரசு சரியான நேரத்தில்  ஊரடங்கு என்ற நல்ல முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாட்டில் கொரோனா தொற்றை தடுப்பது எளிதல்ல. அதனால் ஊடரங்கு தான் சரியான நடவடிக்கை.

Advertising
Advertising

ஒரு விளையாட்டு வீரனாக வீட்டில் முடங்கிக் கிடப்பது கஷ்டமானதுதான். ஆனால் பொதுமக்களில் ஒருவனாக அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். இந்த ஊரடங்கு நாட்களை குடும்பத்தினருடன் உற்சாகமாக செலவிடுங்கள். எனக்காகவும் நேரத்தை செலவிடுகிறேன். புத்தகங்கள் படிப்பது எனக்கு பிடிக்கும். அதனால் புத்தகங்களை படிக்க நேரத்தை செலவிடுகிறேன். வீட்டில் மற்றவர்களுக்கு உதவியாக இருங்கள். நான் வீட்டை சுத்தம் செய்கிறேன். எனக்கு சமைக்கத் தெரியாது. அதனால் மனைவிக்கு உதவியாக இருக்கிறேன். ஊரடங்கால் ஏற்பட்ட இடைவெளி நல்லதுதான். இந்த இடைவெளி நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும். இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.

Related Stories: