கொரோனா நோயாளிகளுடன் போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு அநீதி: பிரியங்கா காந்தி வீடியோ வெளியீடு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுடன் போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பிரியங்கா காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பண்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ ஊழியர்களின் பணிகள் குறித்து வெளியிடப்பட்ட வீடியோவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் மாணவர் ஒருவர் தனிமைப்படுத்தபடுகிறார். சானிடைசர் மற்றும் முக கவசங்கள் தேவைக்கேற்ப மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு வழங்கவில்லை. அவர்களின் சம்பளமும் அவர்களுக்கு வழங்கவில்லை என்று, மாணவர் குற்றம் சாட்டுகிறார்.

மேலும், ‘இங்கிருந்து வெளியேறு; இல்லையென்றால் கைகளையும் கால்களையும் கிழித்து விடுவேன்... உங்களை அகற்ற யோகியிடம் (முதல்வர்) உத்தரவு வந்துவிட்டது’ என்று கூறப்பட்டதாக அந்த மாணவர் குற்றம் சாட்டினார்.

மேலும், பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘மருத்துவ ஊழியர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் உயிர் கொடுப்பவர்கள் மற்றும் போர்வீரர்களைப் போல களத்தில் உள்ளனர். பண்டாவில், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான கருவிகளை வழங்காமலும், அவர்களின் சம்பளத்தை குறைப்பதன் மூலமும் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது.

பல இடங்களில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு கருவி கோருகிறார்கள். அவற்றின் குறைபாடுகள் எல்லா இடங்களிலும் இருந்தும் வெளிவருகின்றன. கொடுக்கப்பட்ட முக கவசங்களால் எளிய வைரஸ்களைக் கூட தடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வி எழுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: