×

ஏற்காடு மலைப்பாதையில் உணவின்றி பரிதவித்த குரங்குகளுக்கு பழங்கள் வழங்கிய பள்ளி மாணவி

சேலம்: சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரியா. இவரது மகள் நேத்ரா (7). இவர், சேலத் தில் உள்ள இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். சர்வதேச ஸ்கேட் டிங் வீராங்கனையான நேத்ரா பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதுதவிர குதிரை ஏற்றம், நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். நேத்ரா பள்ளி விடுமுறை நாட்களில் ஏற்காடு மலைப்பாதையில் சென்று அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் மற்றும் காய்கறிகள் வழங்குவது வழக்கம். தற்போது 144 தடை உத்தரவால், ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்கள் ஏதும் சொல்லவில்லை. இதனால் குரங்குகள் உணவுக்கு பரிதவித்து திரிந்து கொண்டிருக்கிறது.

அந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று நேத்ரா, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று காலை நேத்ராவும் அவரது தாயார் பிரியாவும் ஏற்காடு மலைப்பாதைக்கு சென்று வாழைப்பழம், கேரட் மற்றும் காய்கறிகளை குரங்கு களுக்கு வழங்கினர். சிறுமியின் செயலை அப்பகுதியில் இருந்த வனத்துறையினர் பாராட்டி ஊக்கமளித்தனர். பின்னர் நேத்ரா ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள போதி மரம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியோர்களுக்கு கவசமும், பழ வகைகளும் வழங்கினார்.

Tags : Yercaud ,Yercaud Mountain Path ,Schoolgirl Who , Yercaud Mountain Tracker
× RELATED நாகூரில் இருந்து பள்ளியில் படிக்க...