×

திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி?..முடிவுகள் வெளியிட அரசு மறுப்பதாக குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 18 பேருக்கு கொரோனா உறுதியான போதும் அரசு அதனை வெளியிட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சியில் பரிசோதனை கூடம் இல்லை என்பதை காரணம் காட்டி முடிவுகள் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை 126 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாலை வரை சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்த வரை திருச்சி அந்த பட்டியலில் சேர்க்கவில்லை. உறுதியானவர்களின் விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் சமீபத்தில் வெளியான விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வெளியான அறிக்கையின் படி 17 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் உறுதியானவர்கள் ஆகவும், பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசு இதுவரை ஏன் இதை வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மத்திய மாவட்டமாக இருக்கக்கூடிய திருச்சியில் அதிக அளவிலான மக்கள் வருகின்றனர். அதிக அளவில் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் screening specificity மட்டுமே உள்ளது.

confusion specificity இல்லை என்பது மக்களிடையே ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. 2010-ல் வாங்கப்பட்ட screening-ஐ பயன்படுத்தி இதுவரை பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து confusion test எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சுகாதாரத்துறை செயலாளர் பேசுகையில் பரிசோதனை செய்தால் 24 மணி நேரத்தில் நம்மால் அதை தெரிந்து கொள்ள முடியும் என இதுவரை பேட்டியளித்த போது தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விவரக்குறிப்பில் 31-ம் தேதி பரிசோதனை எடுக்கப்பட்டு 3-ம் தேதி மதியம் 3.30-க்கு இந்த அறிக்கையானது சமர்பிக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் ஒரு பரிசோதனை முடிவு வர தேவைப்பட்டுள்ளது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 126 பேர் உள்ளனர். 26 பேர் முடிவுகள் வந்துள்ளது. மிதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் வர எவ்வளவு நாட்கள் ஆகுமோ? இன்னும் எத்தனை நோயாளிகள் வருவார்களோ? எவ்வளவு பேர் வெளியே சொல்வார்களோ? எத்தனை பேருக்கு பரவுமோ? என்ற அச்சம் திருச்சியில் தற்போது எழுந்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.


Tags : district ,Trichy , Trichy, Corona, Govt
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்