×

அரிசி, முகக்கவசம் தருவதாகக் கூறி கூட்டம் சேர்ப்பு: தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால் பலருக்கும் கொரோனா பரவும் அபாயம்

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால் பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வருவதால் நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை தவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கும்  நிலையில் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக இருந்தது.

பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலருக்கு உறுதியாகி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால் பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரிசி, முகக்கவசம் தருவதாகக் கூறி அரசியல்வாதிகள் கூட்டம் சேர்த்து வருகின்றனர். சமூக இடைவெளியைக் கூட பின்பற்றாமல் பொதுமக்களை அரசியல்வாதிகள் கூட்டுவதால் ஆபத்து ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசியல்வாதிகளின் விளம்பர மோகத்தால் நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்தக் கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : politicians ,Tamil Nadu ,Corona ,Rice , Politician, corona, peril
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...