கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி பாதை அமைப்பு

சென்னை : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 60 லிட்டர் வரை கிருமிநாசினியை தெளிக்கும் வகையில், பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 16 மணி நேரம் இயங்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகரில் வடக்கு மாதேவி சாலையில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் கிருமிநாசினி தெளிப்புப் பாதையை அமைத்துள்ளது.

கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் காய்கறி சந்தை நுழைவு வாயிலில் கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் இந்த தானியங்கி கிருமி நாசினி பாதை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொது மக்கள், கிருமி நாசினி பாதை வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவேளியுடன் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: