மாவட்ட வருவாய்த்துறை சார்பில் 600 நாடோடி குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் விநியோகம்

மதுரை: நரிக்குறவர் உள்ளிட்ட நாடோடி இனத்தை சேர்ந்த 600 குடும்பங்களுக்கு மதுரை மாவட்ட வருவாய்த்துறை சார்பில், அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு பொருட்களை இலவசமாக வழங்க யாரேனும் உதவ வரலாம் என கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 4 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேகரித்தனர். இதனை, பி.கே.எம் அன்டு நிறுவனம், பென்னர் நிறுவனம் ஆகியவை வழங்கின. இவற்றை வருவாய்த்துறை சங்கம் சார்பி, சக்கிமங்கலம் கிராமத்தில் உள்ள அன்றாடவேலைசெய்து கொண்டிருக்கும் நரிக்குறவர், சாட்டையடிப்பவர்கள், பார்வையற்றவர்கள் என மொத்தம் 600 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் ஆகியவற்றை கலெக்டர் வினய் நேற்று வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் பாண்டி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: