×

இது எங்க ஏரியா... உள்ள வராதே: சாலையில் முட்களை வெட்டி போட்ட கிராம இளைஞர்கள்

மேலூர்: மேலூர் அருகே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மற்ற பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு வர வேண்டாம் என அனைத்து பாதைகளையும் முள்ளை வெட்டி போட்டு கிராம இளைஞர்கள் தடை செய்துள்ளனர்.மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் மற்றவர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சிரயான்பட்டி ஊராட்சி இளைஞர்கள் தங்கள் கிராமத்திற்குள் வெளிநபர் யாரும் வர வேண்டாம் என கூறி நேற்று முட்செடிகளை வெட்டி சாலையை முற்றிலும் அடைத்துவிட்டனர்.இந்த ஊருக்கு வரும் 4 பாதைகளையும் ஒரே நேரத்தில் இவர்கள் அடைத்து விட்டதால், இதை கடந்து தங்கள் ஊருக்கு செல்லும் சிலர் அவதிப்பட்டனர். பின் அவர்கள் வேறு பாதை வழியாக சுற்றிக்கொண்டு தங்கள் ஊருக்கு சென்றனர்.

Tags : area , Village, youths ,road
× RELATED குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தனிமை வார்டு அமைக்க எதிர்ப்பு