×

பயம் இருக்கு, ஆனா இல்லை என்ற நிலை சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்: காவல்துறை முழுமையாக ரோந்து செல்ல கோரிக்கை

வேலூர்: கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அசட்டு துணிச்சலுடன் செயல்படுவதாகவும், முழுமையான அளவில் வீதிகளில் காவல்துறை ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்தும், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், சாலைகளில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் தொடர்ந்து வருகிறது.

அதேநேரத்தில் காலையில் அத்தியாவசிய பொருட்களுக்காகவும், தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கத்துக்காகவும் வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெரிசலுடன் சாலைகளில் நடமாடுவது நேற்று அதிகரித்து காணப்பட்டது.அதேபோல் சாலை சந்திப்புகளில் இளைஞர்கள் கும்பல் கும்பலாக அமர்ந்து அரட்டை அடிப்பதும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாரின் ரோந்து நகரின் உட்பகுதிகளிலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : People,social gap,patrol
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக...