×

கொரோனா எதிரொலி!!.. ஊரடங்கு உத்தரவால் வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்

மும்பை : ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் சமூக விலகலை கடைபிடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கூடாத வகையில் பல திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் வெளியே செல்ல அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவுரங்காபாத் நகரில் இஸ்லாமியர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்று வீடியோ கால் மூலமாக நடந்துள்ளது. அவுரங்காபாத்தைச் சேர்ந்த முகமது மின்ஹாஜுத் என்ற மணமகனுக்கும், பீட் நகரைச் சேர்ந்த மணமகளுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. 144 தடை உத்தரவின் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மணமகள் தனது பெற்றோர் வீட்டில் இருந்தவாறே வீடியோ கால் முறையில் பங்கு பெற்றுள்ளார்.
தொடர்ந்து, மதகுருமார்கள் மணமகன் - மணமகள் இருவரிடமும் சம்மதம் கேட்டு, திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

Tags : Corona ,curfew video call , Corona, Curfew, Directive, Video Call, Marriage, Maharashtra, Aurangabad
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...