கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் போலீசார் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரண நிதி: மகாராஷ்ரா அரசு அறிவிப்பு

மும்பை: கொரோனா வைரஸ் பாதிக்கபட்டு உயிரிழக்கும் போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலானதால் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி பலர் பொறுப்பை உணராமல் சாலையில் சுற்றித்திரிகின்றனர். இதனால், போலீசுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை பேட்டியளித்த அஜித் பவார், கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் போலீஸ், சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் யாரும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் 411 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது.

Related Stories: