×

நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: விழுப்புரத்தில் 51 வயதுடையவர் பலி; தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200  நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள  நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று  வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 68 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என  மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றப்பின் தமிழகம் திரும்பிய 51 வயது ஆணுக்கு கடந்த 5 நாட்களாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். நேற்று இரவு (03.04.2020) மூச்சுத்திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 32 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது. அவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளரா?  இல்லை வேறு நோய் காரணமாக உயிரிழந்துள்ளரா? என்பது பரிசோதனை முடிவிற்கு பின் தெரியவரும். கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் தமிழகத்தில் முதல் பலியாகும். சர்க்கரை நோய், உயர் இரத்த  அழுத்தம் உள்ளிட்டவை  இருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. எனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Tags : kills ,Corona ,Tamil Nadu , 51-year-old killed in Corupona; Death toll rises to 2 in Tamil Nadu
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...