தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி: மாவட்ட ஆட்சியர் அறிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்துள்ளார் என கூறினார். அதனால் 25-03-2020 முதல் 01-04-2020 வரை சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் தங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரம்ம இருந்தால் தெரிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் மருத்துவ உதவிக்கு கீழ் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை எணகளுக்கு அழைக்கவும் எனவும் அறிக்கையில் தெரிவித்தார்.

 காயல்பட்டிணம் அரசு மருத்துவனைக்கு மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் சென்று வந்த அனைவருக்கும் இத்தகவலை தெரியப்படுத்துமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். எனவே யாருக்கவது கொரோனா தொற்று அறிகுறிகள் எதும் இருந்தால் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்யுமாறு கேட்டு கொண்டார். மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடிக்குமாறு தெரிவித்தார். அதேபோல் 144 தடை அமலில் இருக்கும் போது யாரும் தேவை இல்லாமல் வெளியே செல்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

கொரோனா அறிகுறி இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்: 0461-2340101, 2340214, 2340307, 2340314, 2340378

Related Stories: