கொரோனாவால் இடிந்து நிற்கும் இத்தாலி : 15,000 ஆயிரத்தை தொடும் பலி எண்ணிக்கை; கண்ணீரில் மக்கள்

ரோம் : கொடூரத்தனமாக இத்தாலியை மிரட்டும் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 766 பேர் உயிரிழந்துள்ளது மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 39,391 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால் அதிக உயிரிழப்பை சந்தித்த இத்தாலியில் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்படுகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 766 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 14,681 ஆக அதிகரித்தது. இத்தாலியில் 1,19,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 19,758 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 85,388 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 4,068 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். வியாழக்கிழமையன்று இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 760 ஆக இருந்தது. புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4668 ஆக இருந்தது. அதற்கு முதல் நாள் அது 4782 ஆக இருந்தது... தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் நிலையில், தற்போது இத்தாலியில் வரும் பலி எண்ணிக்கை குறைவு என்ற செய்தி சற்று ஆறுதலையே தந்து வருகிறது!!

Related Stories: