ஸ்பெயினில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா : ஒரே நாளில் 932 பேர் பலி, உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

ஸ்பெயின் : கொரோனாவால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று மட்டும் 932 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 39,391 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனவால் தொடர்ந்து உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 932 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 11,198ஆக அதிகரித்தது. ஸ்பெயினில் 1,19,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 30,513 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 77,488பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6,416 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகிஉள்ளதால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.புதிய தொற்று ஏற்படுவதும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையிலும் இத்தனை பேர் ஒரே நாளில் இறந்திருப்பது ஸ்பெயின் அரசை அதிர வைத்துள்ளது.

Related Stories: