கோவை அரசு மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலுக்கு இளம்பெண் பலி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் சேலத்தில் உயிரிழப்பு

சென்னை: கோவையில் மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக இளம்பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். டெல்லி சென்று வந்ததால் சேலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீரென இறந்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகள் சங்கீதா(20). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. காய்ச்சல் அதிகமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் சங்கீதாவை அவரின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பினால் உயிரிழந்தார். நேற்று இளம்பெண் சங்கீதா உயிரிழந்துள்ளனர்.

 சேலத்தில் ஒருவர் பலி: சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஒருவர், கடந்த மாதம் சென்றிருந்தார். அவர் கடந்த 24ம்தேதி சேலம் திரும்பினார். இதையடுத்து அவரது வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி தனிமைப்படுத்தினர். மேலும் அவரை கண்காணித்து வந்தனர். தொடர் விசாரணையில் அவரது சகோதரி டெல்லியில் இருப்பதாகவும் அவர்களின் வீட்டிற்கு சென்றதாகவும் அதிகாரிகளிடம் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், நேற்று பகல் 1 மணி அளவில் திடீரென உயிரிழந்தார். இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதன்காரணமாக அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக இருக்குமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Related Stories: