கொரோனா நோயாளிகளை காக்க வென்டிலேட்டர் தயாரிக்கிறது ஐஐடி

சென்னை: ஐதராபாத்தில் இயங்கி வரும் ஐஐடியில் உள்ள ஹெல்த்கேர் தொழில் முனைவோருக்கான மையம், அவசரகால வென்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்த வென்டிலேட்டர்கள் குறைந்த விலை மற்றும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்படும். இதற்கு ‘ஜீவன்லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 வென்டிலேட்டர்களை தயாரிக்கவும் ஐஐடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐதராபாத் ஐஐடியின் பேராசிரியர் மூர்த்தி கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் உயிரைக் காப்பாற்றும் அவசர கருவியாக இந்த வென்டிலேட்டர்கள் தேவைப்படும். இது தவிர குழந்தைகளுக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களையும் இந்த ஜீவன் லைட் திட்டத்தின் மூலம் தயாரிக்ப்படும். மின்சாரம் இல்லை என்றாலும் குறைந்த பட்்சம் 5 மணி நேரம் இவை செயல்படும். இவற்றில் வயர்லெஸ் இணைப்புடன் கூடிய ரிமோட் மூலம் இயக்க முடியும். எனவே தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Stories: