முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி மதுவிலக்கு கொள்கையை புதைத்துவிட்டு ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்பதா?

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மே 2018ல் 3,866 டாஸ்மாக் கடைகள் தான் இருந்தன. அது மே 2019ல் 5,152 டாஸ்மாக் கடைகளாக பெருகியதற்கு எடப்பாடி அரசு தான் காரணம். இதன் மூலம் ஜெயலலிதா விரும்பிய பூரண மதுவிலக்கு கொள்கையை எடப்பாடி அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. இந்நிலையில் எடப்பாடி ஆட்சியை அம்மாவின் ஆட்சி என்று கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மக்கள் ஊரடங்கு அறிவித்தது முதல் மது குடிக்கு அடிமையானவர்கள் மதுவை தேடி அலைகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மது பாட்டில்கள் பகிரங்கமாக விற்கப்படுகிறது. இதற்கு காவல்துறையினர் துணை போவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

வேலூர் அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதே போல வேலூர் நகரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அங்கொன்றும், இங்கொன்றுமாக கைது நடவடிக்கைகள் இருந்தாலும் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிவிட்டதாக தமிழக அரசை குற்றம் சாட்ட விரும்புகிறேன். அதிமுக ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்குமேயானால் ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் விருப்பம் இருந்தால் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிக்கிற பழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி குடிக்கு அடிமையானவர்களுக்கு  தமிழகத்தின் பல பகுதிகளில் மறுவாழ்வு மையங்களை உடனடியாக தமிழக அரசு தொடங்கவேண்டும். இந்த ஊரடங்கு காலமான 21 நாட்களை அரசு சரியாக பயன்படுத்தி, பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும்.

Related Stories: