பசியால் வீட்டில் முடங்கியோருக்கு 3 மாதத்துக்கு தேவையான உதவி: உதயநிதி ஸ்டாலினுக்கு மாற்று திறனாளிகள் சங்கம் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய இந்த இக்கட்டான  காலகட்டத்தில் வீட்டிற்குள்ளேயே பசியும் பட்டினியுமாக  உள்ள ஏழை மக்கள், வியாபார பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும்  மாற்றுத் திறனாளிகள் என்று பல தரப்பட்ட மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு தொலைபேசி எண்ணை வழங்கி, அதன் மூலம் மிகச் சீரிய முறையில் உதவிகளை வழங்கி வருவது போற்றத்தக்க ஒன்றாக உள்ளது.

வடசென்னை மாவட்டம், மாதாவரம் பகுதியில் வசிக்கும்  மாற்று திறனாளி குடும்பங்கள் பசியும், பட்டினியுமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த செய்தியை அறிந்து திமுக இளைஞர் அணி சார்பாக  அக்குடும்பங்களுக்கு  மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், சர்க்கரை, ரவை, மற்றும்  அத்தியவசிய பொருட்களை வழங்கிய மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: