×

144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: பத்திரிக்கையாளர்களுக்கு ரூ.3000 நிவாரண நிதி வழங்கப்படும்...முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு நிவாரண பொருட்களை  வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வேறு மாநிலகளில் இருந்து  மளிகைப் பொருட்கள் வரவேண்டி உள்ளது. தமிழகத்தில் இருந்து சென்று வேறு மாநிலத்தில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை 7,198 பேராக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனாவின் அபாயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்றார். சட்டம் தன்  கடமையைச் செய்யும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். மக்களின் தேவைகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக் கொள்ள  வேண்டும். அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. ஜிஎஸ்டி உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்த போதிலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.

தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். டோக்கன் வழங்கும் போதே கொரோனா நிவாரணமான ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது. எப்படி தடுக்க  வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? மக்கள் எப்படி பின்பற்ற வேண்டும்? என்று தொலைக்காட்சி வாயிலாக கொண்டு செல்லும் பதிவு செய்யப்பட்ட மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் , ஊடகவியலாளர்களுக்கு  ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



Tags : violators ,journalists , 144 Strict action against violators: Journalists will be given Rs.
× RELATED நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை ஐகோர்ட் நிறுத்திவைப்பு