டெல்லி தப்லிஜி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசாவை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: விசா நிபந்தனைகளை மீறி தப்லிகி ஜமாஅத் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 960 வெளிநாட்டினரை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அவர்களின் விசாக்களை ரத்து செய்தது. இந்த வெளிநாட்டினர் தற்போது வசித்து வரும் மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களிடம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. டெல்லியை அடுத்துள்ள, நிஜாமுதீனில் நடந்த தப்லிக் - இ - ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களில 400-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்  தப்லிக் இ ஜமா கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,300 வெளிநாட்டவர் பங்கேற்றனர். இதில், 960 வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் , சுற்றுலா விசா பெற்றுவிட்டு டெல்லி கூட்டத்தில் பங்கேற்றதால் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: