×

காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு : 5 நாட்களாக படகில் வசிக்கும் 60 வயது முதியவர்

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவரை கிராம மக்கள் ஊருக்குள் அனுமதிக்காததால் அவர் தன்னை தானே சுய தனிமைப்படுத்தி கொண்டு படகில் வசித்து வருகிறார். மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ஹோல்டர் என்ற முதியவருக்கு 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா பீதியால் கிராம மக்கள் முதியவரை ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் உள்ளூர் மருத்துவரின் பரிந்துரையை ஏற்று முதியவர் ஊர் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள படகில் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டு வசித்து வருகிறார்.

கொரோனா பீதியால் கிராம மக்கள்  பெரும் அச்சமைடைந்துள்ளதாக முதியவர் ஹோல்டர் தெரிவித்துள்ளார். எனவே கிராம மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களின் மனநிலையை உணர்ந்து தம்மை தாமே சுய தனிமைப்படுத்தி கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக முதியவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,000ஐ தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் சுமார் 5,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : town , Malta, Elderly, Boat, West Bengal, Corona, Villagers
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...