பொதுமக்கள் தேவைக்காக சிறப்பு சரக்கு ரயிலில் திருச்சி வந்த 2,600 டன் கோதுமை

திருச்சி: தமிழகத்தில் ரேஷன் விநியோகத்திற்காக மத்திய பிரதேசம் போபாலில் இருந்து 2,600 டன் கோதுமை சிறப்பு சரக்கு ரயில் மூலம் நேற்று திருச்சி குட்ஷெட்க்கு வந்தது.

47 வேகன்களில் வந்த சரக்கு ரயில் பெட்டிக்கு முதலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்கள் லாரிகளில் கோதுமை மூட்டைகளை அடுக்கினர்.

பின், கோதுமை ஏற்றப்பட்ட லாரிகள் கே.கே.நகரில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு பண்டகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வாரியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு கோதுமை விநியோகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: