×

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை: வீடியோ கான்பரன்சில் துணை ஜனாதிபதியும் பங்கேற்பு

டெல்லி: சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 2,031 பேர்   கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத்  அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம்  வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனால், நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் முடக்கம், உரிய பலனில்லாமல் போயுள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு  வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை  நிலை கவர்னர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

 இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனையின் போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், கொரோனாவை தடுப்பது குறித்து  ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


Tags : consultation ,state governors ,video conferencing ,Coronation Prevention: Vice President ,Vice President Participates ,Consults: Video Conference ,President ,All State Governors , President consults with all state governors on Coronation Prevention: Vice President Participates in Video Conference
× RELATED வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை: ஐகோர்ட்டில் 341 வழக்குகள் முடித்துவைப்பு