ஒளியேற்றினால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது : பிரதமர் மோடியின் உரை ஏமாற்றம் அளிப்பதாக ப.சிதம்பரம் கருத்து

சென்னை : எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் உரை, பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். பிரதமர் கூறுவது போல ஏப்ரல் 5ம் தேதி ஒளி ஏற்ற தயாராக இருப்பதாக கூறிய அவர், பிரதமர் மோடி தயவு செய்து வல்லுனர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும் என்று ட்விட்டர் வாயிலாக அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஏழைகளுக்கான வாழ்வாதார ஆதரவு தொகுப்பு பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் ஒளியேற்ற கூறி இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளை ஒழிக்க ஒளியேற்றுவது போல அடையாள நடவடிக்கை மட்டும் போதாது என்று அவர் கூறியுள்ளார். தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒவ்வொரு உழைக்கும் ஆணும், பெண்ணும், வணிக நபர் முதல் தினசரி கூலி சம்பாதிப்பவர் வரை, பொருளாதார சரிவைக் கைதுசெய்து பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி உரை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும், இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்.வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார். செல்போன் டார்ச் மூலம் கொரோனோவுக்கு எதிராக வெளிச்சத்தை காட்டுங்கள். கொரோனா எனும் இருட்டை வெளிச்சத்தால் அகற்றுவோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: